கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியும் வழக்கம் உலகம் முழுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.
இருப்பினும் ஆங்காங்கே மக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருவதால் தொற்றுப்பரவல் கூடி வருகிறது. இதன் காரணமாக மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் துணியால் ஆன முகக்கவசங்களையும் அணிந்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் விமான பயணி ஒருவர் உள்ளாடையை முகக்கவசமாக அணிந்த நிகழ்வு அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஃபுளோரிடாவில் இருந்து வாஷிங்க்டன் செல்ல இருந்தவர் ஆடம் ஜேன். அவர்தான் உள்ளாடையை மாஸ்க்காக அணிந்திருக்கிறார்.
அவரைக் கண்ட விமான பணியாளர் முறையான மாஸ்க்கை அணியாவிடில் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்படுவீர்கள் என எச்சரித்திருக்கிறார். இதனால் ஆடம் ஜேனுக்கும் ஊழியருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது.
இறுதியில் ஆடம் ஜேனும் அவருக்கு ஆதரவாக பேசிய சில பயணிகளும் கீழே இறக்கப்பட்டிருக்கிறார்கள். இதனையடுத்து தனக்காக பேசிய இதர பயணிகளுக்கு நன்றி தெரிவித்த ஆடம், அரசாங்கம் கொடுத்த வழிமுறைகளின் படியே உள்ளாடையை மாஸ்க்காக அணிந்ததாக திட்டவட்டமாக கூறினார்.