இந்தியா

காதலியின் கணவனை கண்டதும் பால்கனியில் இருந்து குதித்த காதலன்; தப்பியோடிய தம்பதி; ஜெய்ப்பூரில் அதிர்ச்சி!

காதலியின் கணவனை கண்டதும் மாடியில் இருந்து குதித்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.

காதலியின் கணவனை கண்டதும் பால்கனியில் இருந்து குதித்த காதலன்; தப்பியோடிய தம்பதி; ஜெய்ப்பூரில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான மோஹ்சின் என்ற நபர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணமான பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக Livin முறையில் வசித்து வந்துள்ளார்.

அந்த பெண் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிட்டால் பகுதியைச் சேர்ந்தவராவார். திருமணமாகி ஒரு குழந்தையுடன் இருந்த அந்த பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ராஜஸ்தானுக்கு வந்திருக்கிறார் மோஹ்சின்.

முதலில் இருவரும் தனித்தனி வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் ஒரே வீட்டில் வசித்திருக்கிறார்கள். இதனிடையே பெண்ணின் கணவர் இருவரையும் வலைவீசி தேடி வந்திருக்கிறார்.

இருவரும் ஜெய்ப்பூரில் இருப்பதை அறிந்து நேரில் சென்றிருக்கிறார். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பெண் இருக்கும் வீட்டுக்கே சென்றிருக்கிறார். அப்போது அந்த பெண்ணின் கணவரை கண்டதும் கடும் அதிர்ச்சிக்குள்ளான மோஹ்சின் செய்வதறியாது அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்திருக்கிறார். இதில் மோஹ்சின்னிற்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனைக் கண்டதும் அந்த பெண்ணும் அவரது கணவரும் இணைந்து மோஹ்சின்னை SMS அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மறுநாள் திங்கள் கிழமை மோஹ்சின் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதாப் நகர் போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மோஹ்சின் உயிரிழந்ததை அடுத்து அவருடன் வசித்து வந்த பெண்ணும் அவரது கணவரும் தலைமறைவாகிவிட்டதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories