இந்தியா

நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. “சும்மா விடமாட்டேன்.. கோர்ட்டுக்கு போவேன்” : கொதித்த ரோஜா.. காரணம் என்ன?

விமானத்திலிருந்து இறங்க விடாமல் 5 மணி நேரம் உள்ளேயே காக்க வைத்ததாக, இண்டிகோ விமான நிறுவனம் மீது நடிகை ரோஜா புகார் தெரிவித்துள்ளார்.

நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. “சும்மா விடமாட்டேன்.. கோர்ட்டுக்கு போவேன்” : கொதித்த ரோஜா.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விமானத்திலிருந்து இறங்க விடாமல் 5 மணி நேரம் உள்ளேயே காக்க வைத்ததாக, இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது நடிகை ரோஜா புகார் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, தற்போது ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏவாக இருக்கும் ரோஜா, இன்று விமானத்தில் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு பயணம் செய்துள்ளார். அவருடன் சுமார் 70 பயணிகள் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

திருப்பதி விமான நிலையத்தை அடைந்தபோது, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் சூழல் உருவானதால், விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு விமானத்தை பெங்களுருவை நோக்கித் திருப்பி பெங்களூரில் தரையிறக்கியுள்ளார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்ட ரோஜா, “ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற விமானத்தில் பயணித்தேன். தரையிறங்கும் சமயத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக அறிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

பெங்களூரு விமான நிலையத்திற்குச் சென்ற விமானத்திலிருந்து பயணிகளை கிட்டத்தட்ட 4 மணிநேரம் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்துப் பேசியுள்ள ரோஜா, "நாங்கள் சுமார் 5 மணி நேரமாக விமானத்திற்கு உள்ளேயே காத்திருக்கிறோம். எங்களை வெளியே செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள்.

சமீபத்தில் மேற்கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக விமானத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் வலி அதிகமாக உள்ளதாகக் கூறி வெளியே செல்ல அனுமதி கேட்டும் மறுத்தனர்.

மேலும், விமானத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க ரூ.5000 தரவேண்டும் என்று கூறினர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மீண்டும் பெங்களூரு திரும்பிய நிலையில் பயணிகளிடம் பணம் கேட்டதாக நடிகை ரோஜா புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories