இந்தியா

DMK MP FROM TAMILNADU : முதல் பேச்சிலேயே ஒன்றிய அரசிடம் உறுதி வாங்கிய தி.மு.க எம்.பி!

ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி குறைக்கப்படுமா? என மாநிலங்களவையில் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கேள்வி எழுப்பினார்.

DMK MP FROM TAMILNADU : முதல் பேச்சிலேயே ஒன்றிய அரசிடம் உறுதி வாங்கிய தி.மு.க எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையைக்கலைப்பதன் மூலம் ஊரகவளர்ச்சி திட்டங்களுக்குநிதி ஒதுக்கீடு குறைக்கப்படுமா? என்று மாநிலங்களவையில் கழக உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கேள்வி எழுப்பினார்.

1999ம் ஆண்டு முதல்மத்திய ஊரக வளர்ச்சிதுறை மூலமாக சங்கர்கமிட்டி அமைக்கப்பட்டுஅதன் மூலம் நாடேங்கிலும், மாவட்டந்தோறும்ஊரக வளர்ச்சிக்குமாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை நிறுவப்பட்டது.

இந்த மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின்மூலம் ஒன்றிய அரசாங்கத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும், மாநில அரசாங்கத்தின் வளர்ச்சி துறைக்கானநிதி ஒதுக்கீடும், மாவட்டவளர்ச்சி முகமையின் மூலமாக ஊராட்சி ஒன்றியங்களுக்கும் கிராம பஞ்சாயத்துக்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டு வந்தது.

இந்த மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் தலைவராக மாவட்ட ஆட்சிதலைவர் அவர்கள் இருப்பார்கள். மாவட்ட வளர்ச்சி முகமையின் மூலமாக நாடேங்கிலும் ஊரகவளர்ச்சி திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் ஒன்றியஅரசாங்கம் மாவட்டவளர்ச்சி முகமையைகலைத்து, வருகின்ற நிதியாண்டு முதல் இது இயங்காது என அறிவித்துள்ளது. அதையொட்டி மாநிலங்களவையில் கழக உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் கேள்விஎழுப்பினார்.

நடைபெற்று வரும்நாடாளுமன்ற குளிர்காலகூட்டத் தொடரில் 08.12.2021 அன்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் வழங்கியுள்ள பதில் வருமாறு:-

ஒன்றிய அரசின் முன்னாள் நிதி துறை செயலாளர் சுமித் போஸ் அவர்களின் தலைமையின் கீழ்அமைக்கப்பட்ட குழு ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வறிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிபடையில்அவர் வழங்கிய பரிந்துரையின் படி மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையைமாவட்ட ஊராட்சி குழுவின் கீழ் கொண்டு வருவதன் மூலம் திட்டங்கள் சிறப்பாக செயல்படும்என்றும், அவர் கொடுத்தபரிந்துரை அடிப்படையில் ஊரக முகமையை (1.4.2022) முதல் கலைக்கப்பட்டு அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கேற்றவாறு முடிவெடுத்து கொள்ளலாம் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது

அந்தந்த மாநிலங்கள்மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமையை வேறெதாவதுதுறையோடு இணைத்துகொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சிமுகமையில் உள்ள பணிஅலுவலர்கள் வேறு துறைகளுக்கு மாற்றலாம் என்றும் அவர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்றவாறு பணி அமர்த்தபடுவர் என்றும் மாவட்ட வளர்ச்சிக்கு வழங்கப்பட்டு வந்தநிதி கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும்.

ஒன்றிய அரசால் ஊரகவளர்ச்சி திட்டங்களுக்குவழங்கப்பட்டு வந்த நிதிமேலும் தொடரும் என்றும் அந்த நிதி குறைக்கப்படாது என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories