அரசியல்

”சரி.. நான் தமிழ்ல பேசுறேன்; உங்களுக்கு புரியுதா சொல்லுங்க” - மக்களவையில் தெறிக்கவிட்ட திமுக MP கனிமொழி!

இந்தி திணிப்பு குறித்து மக்களவையில் சிரித்தபடியே தக்க பதிலடி கொடுத்துள்ள திமுக எம்.பி. கனிமொழியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

”சரி.. நான் தமிழ்ல பேசுறேன்; உங்களுக்கு புரியுதா சொல்லுங்க” - மக்களவையில் தெறிக்கவிட்ட திமுக MP கனிமொழி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பெயர்களை ஆங்கில மொழியில் வைக்காமல் இந்தியை திணிக்கும் வகையில் இந்தி மொழியிலேயே வைத்து வருவது பா.ஜ.க. ஆட்சியில் தொடர் கதையாகி வருகிறது.

இதற்கும் நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக தங்களது கண்டனங்களையும் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க எம்.பி. கனிமொழி காலநிலை மாற்றம் தொடர்பாக உரையாற்றியிருந்தார்.

அப்போது ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்’ என இந்தியில் வைத்திருந்த திட்டத்தின் பெயரை உச்சரிப்பதில் சிரமப்பட்டதோடு Its very difficult எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய கனிமொழி, இதுதான் பிரச்னையாக உள்ளது. நாங்கள் வெவ்வேறு மொழிகளை பேசுவதை நீங்கள் புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.

ஆகையால் திட்டங்களின் பெயர்கள் இந்தியிலோ அல்லது மாநில மொழிகளில் இருந்திருந்தால் உறுப்பினர்களான எங்களும் படிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்காது எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், “உங்களுக்கு புரியாமல் போனால் என்ன செய்வது?” என வினவினார். இதற்கு சிரித்துக்கொண்டே, “சரி நான் தமிழ்லயே பேசுறேன். உங்களுக்கு புரியுதானு சொல்லுங்க; அதுக்கு பெர்மிஷன் கேக்கனும்னு சொல்றீங்களே? அதுதான் பிரச்னை.” எனக் கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்தது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பான காணொலி தற்போது இணையத்தில் வைரலானதோடு, திமுக எம்பி கனிமொழியின் தக்க பதிலடிக்கு பலரும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories