இந்தியா

2015 விபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய பிபின் ராவத்... இன்று பலியான சோகம்!

கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், தற்போது மீண்டும் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

2015 விபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய பிபின் ராவத்... இன்று பலியான சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், தற்போது மீண்டும் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் எரிந்து விழுந்த விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

முப்படைகளின் தலைவர் பிவின் ராவத் தனது மனைவி மதுலிகாவுடன் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த நிலையில் அவர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததை இந்திய ராணுவம் உறுதி செய்தது. விமானி ஒருவர் மட்டும் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஏற்கனவே இதுபோன்ற விபத்தில் சிக்கி உயிர்தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அன்று, நாகாலாந்தின் திமாபூரில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

என்ஜின் கோளாறு காரணமாக நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு கர்னல் உயிர்தப்பினர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத்தும் இருந்தார்.

அப்போது லெப்டினன்ட் ஜெனரலாக இருந்த பிபின் ராவத், லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார். இந்நிலையில், தற்போது குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories