இந்தியா

நடுவானில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்... நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்துகள் என்னென்ன?

எதிர்பாராத விமான விபத்துகளில் சிக்கி உயிரிழந்த முக்கிய பிரபலங்கள் சிலர்.

நடுவானில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்... நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்துகள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் எரிந்து விழுந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

முப்படைகளின் தலைவர் பிவின் ராவத் தனது மனைவியுடன் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த நிலையில் அவர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததை இந்திய ராணுவம் உறுதி செய்தது.

ஹெலிகாப்டரில் பயணித்த கேப்டன் வருண் சிங், 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நடுவானில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்... நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்துகள் என்னென்ன?

இந்தக் கோரமான ஹெலிகாப்டர் விபத்து இந்தியாவையே உலுக்கியுள்ளது. இதுபோன்ற விமான விபத்துகளால் முக்கியமான தலைவர்கள், பிரபலங்கள் பலியாவது முதல்முறையல்ல.

இதேபோன்று எதிர்பாராத விமான விபத்துகளில் சிக்கி உயிரிழந்த முக்கிய பிரபலங்கள் சிலர் பற்றி இங்கு பார்க்கலாம்.

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் மகனும் ராஜிவ் காந்தியின் இளைய சகோதரருமான சஞ்சய் காந்தி 1980-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

விமானியான சஞ்சய் காந்தி, டெல்லி ஃபிளையிங் கிளப்பின் புதிய விமானம் ஒன்றை இயக்கும்போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் பலியானார்.

ஆந்திர பிரதேசத்தில் இரண்டு முறை முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2009-ஆம் ஆண்டு ருத்ரகொண்டா மலைப்பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

அவர் பயணித்த ஹெலிகாப்டர் மாயமான நிலையில் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தேடுதல் வேட்டைக்கு பிறகே இவர் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் இறந்தது அறிவிக்கப்பட்டது.

நடுவானில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்... நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்துகள் என்னென்ன?

அவரது மறைவிற்குப் பிறகு அரசியலுக்கு வந்த ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி தற்போது ஆந்திராவின் முதலமைச்சராக உள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்ந்த சௌந்தர்யா கடந்த 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பா.ஜ.கவிற்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்வதற்காகச் சென்றபோது பெங்களூரு அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

கடந்த 2005ஆம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி நிகழ்ந்த, ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில், ஹரியானா மாநிலத்தின் அப்போதைய விவசாயத்துறை அமைச்சர் சுரேந்திர சிங் மற்றும் தொழிலதிபர் ஓ.பி.ஜிண்டால் ஆகியோர் உயிரிழந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான மாதவ ராவ் சிந்தியா, 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விமானத்தில் பயணித்தபோது உத்தர பிரதேச மாநிலத்தில் அவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாதவ ராவ் சிந்தியா இந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

banner

Related Stories

Related Stories