இந்தியா

வான் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்த முன்னாள் பிரதமர், முதல்வர்கள், தலைவர்கள் - யார் யார்?

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ராணுவ தளபதி பிபின் ராவத் உயிரிழந்த நிலையில் இதற்கு முன்பு வான் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் பற்றி பார்க்கலாம்.

வான் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்த முன்னாள் பிரதமர், முதல்வர்கள், தலைவர்கள் - யார் யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குன்னூர் மலைப்பகுதியில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து இந்தியா முழுவதையும் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ள கோர நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தீவிர மீட்புப்பணிக்கு பிறகு கேப்டன் வருண் சிங் என்ற அதிகாரி மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஹெலிகாப்டரில் சென்ற முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வான் விபத்தில் சிக்கி உயிரிழந்தவ பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வலம் வருவது போன்று அதேப்போன்றதொரு வான் விபத்தி சிக்கி உயிர் பிழைத்த தலைவர்களின் பட்டியலும் உள்ளன.

அவற்றை இங்கு காண்போம்:

அசாம் மாநிலத்திற்கு 1977ம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமரான மொரார்ஜி தேசாய் சிறப்பு விமானத்தில் சென்ற போது விபத்தில் சிக்கினார். ஆனால் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார்.

ராஜஸ்தானின் முதலமைச்சராக இருந்த அசோக் கெலாட் 2001ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் சிக்கி உயிர் தப்பினார்.

அதேபோல, 2004ம் ஆண்டு தெற்கு குஜராத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர் அகமது படேல், பிரித்விராஜ் சவ்கான், குமார் செல்ஜா ஆகியோர் சென்ற விமானத்தின் முன்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி உயிர் தப்பினர்.

மேலும் 2006ல் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சராக இருந்த அம்ரீந்தர் சிங்கும், 2010ம் ஆண்டில் பாஜகவின் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங்கும், துணைத் தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் உத்தர பிரதேசத்துக்கு பயணித்த போது நூலிழையில் உயிர் பிழைத்தனர்.

banner

Related Stories

Related Stories