இந்தியா

சாக்லேட் ஆசை காட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கழுத்தை நெறித்து சாக்கடையில் வீசிய கொடூரர்கள்!

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழில் செய்து வந்த தம்பதிகளின் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சாக்லேட் ஆசை காட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கழுத்தை நெறித்து சாக்கடையில் வீசிய கொடூரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது மற்றும் 28 வயதான தம்பதிகள் தங்களின் நான்கு குழந்தைகளுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகாவில் உள்ள மங்களூரு அருகே புறநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பராரி கிராமம் பகுதியிலுள்ள ராஜ் டைல்ஸ் பேக்டரியில் கடந்த அங்கேயே குடிசை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்த தம்பதிகளின் நான்கு குழந்தைகளும் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மூவர் வீடு திரும்பி விட்டனர். ஆனால் 8 வயது சிறுமி மட்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி தங்கள் குழந்தையை அந்த பகுதியில் தேடிப் பார்த்தபோது சுமார் 2 மணி நேரம் கழித்து அங்கு உள்ள டைல்ஸ் தொழிற்சாலை வளாகத்திலேயே கழிவு நீர் செல்லும் சாக்கடையில் சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது.

இது சம்பந்தமாக மங்களூரு புறநகர் போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினர். பின்னர் மருத்துவ குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.

சாக்லேட் ஆசை காட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கழுத்தை நெறித்து சாக்கடையில் வீசிய கொடூரர்கள்!

இதனைத் தொடர்ந்து அந்த டைல்ஸ் பேக்டரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து அங்கே வேலை பார்த்து வந்த மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த முனீம்சிங், மணீஷ்திர்கி, முகேஷ்சீங் மற்றும் ஜெபான் என்கின்ற ஜெய் சிங் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது இதில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்து சாக்கடை வீசியது அவர்கள்தான் என தெரியவந்தது. மேலும் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சம்பவத்தன்று மாலை 4 மணிக்கு சிறுமி தனது மற்ற சகோதரர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக கூறி அறைக்கு வரவழைத்து மூவர் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பின்னர் சிறுமி சத்தம் போட்டதால் வாயில் துணியை வைத்து அடைத்து பலாத்கார செயலில் ஈடுபட்டதும் பின்னர் கழுத்தை இறுக்கி கொலைசெய்து வீசியதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து 8 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்து மங்களூர் புறநகர் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் இவற்றை மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் இன்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories