இந்தியா

ஒரே இரவில் 3 ATM இயந்திரங்களில் கொள்ளை.. ரூ.41 லட்சம் திருடிய முகமூடி கொள்ளை கும்பல்: பீகாரில் அதிர்ச்சி!

பீகாரில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.35 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே இரவில் 3 ATM இயந்திரங்களில் கொள்ளை.. ரூ.41 லட்சம் திருடிய முகமூடி கொள்ளை கும்பல்: பீகாரில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் கோட்வா சந்தைப் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.36 லட்சத்து 77 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலிஸார் விசாரணை நடத்தினர். மேலும் ஒரே நாளில் மூன்று ஏ.டி.எம் இயந்திரங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

முதலில் பஹர்பூரில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கு இந்த கும்பலால் கொள்ளையடிக்க முடியவில்லை.

இதையடுத்து கோட்வாவில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம்மில் ரூ.35 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அடுத்து மூன்றாவதாக இண்டிகேஷின் ஏ.டி.எம்மில் இருந்து ஆறு லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.

இந்த மூன்று தொடர் ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவங்களிலும் முகமூடி திருடர்களே ஈடுபட்டுள்ளனரா அல்லது வேறு ஏதேனும் கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories