இந்தியா

“காந்தி வாங்கிய சுதந்திரம் பிச்சை.. மோடி கொடுத்ததே உண்மையான சுதந்திரம்”- கங்கனா ரனாவத் பேச்சால் பரபரப்பு!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி நடிகை கங்கனா ரனாவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“காந்தி வாங்கிய சுதந்திரம் பிச்சை.. மோடி கொடுத்ததே உண்மையான சுதந்திரம்”- கங்கனா ரனாவத் பேச்சால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். பா.ஜ.க ஆதரவாளரான இவர் சர்ச்சையான கருத்துகளைப் பேசி பிரச்னையில் சிக்கிக்கொள்வதையே சமீபகாலமாக வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்தவகையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய கங்கனா ரனாவத் சுதந்திர போராட்ட வீரர்ளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் “1947ல் கிடைத்தது பிச்சை; 2014ல் கிடைத்ததுதான் உண்மையான சுதந்திரம்” எனப் பேசியுள்ளார்.

பா.ஜ.கவினரே கங்கனா ரனாவத்தின் இத்தகைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க எம்.பி வருன் காந்தி கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்வீட்டில், “மகாத்மா காந்தியின் தியாகத்தை சில சமயம் அவமதிக்கிறார். சில சமயம் அவரைக் கொன்றவரைப் புகழ்கிறார். இப்போது மங்கள் பாண்டே, ராணி லக்ஷ்மிபாய், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தின் மீது வெறுப்பை உமிழ்கிறார். இதைப் பைத்தியக்காரத்தனம் எனச் சொல்வதா அல்லது தேசத்துரோகம் எனச் சொல்வதா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் பண்டிட் தனது ட்விட்டர் பக்கத்தில், "1947-ல் தங்கள் பிரிட்டிஷ் எஜமானர்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதை ஆர்.எஸ்.எஸ்ஸால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் அடிமைத்தனத்திற்கு எல்லையே இல்லை. அரை நூற்றாண்டு காலம் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. கங்கனா ரனாவத் அவர்களில் ஒருவர். 2014-ல் உண்மையில் நமது நாட்டின் அடிமைத்தனம் திரும்பியது. இது தான் பா.ஜ.க அளித்துள்ள சுதந்திரம்.’’ எனக் கூறியுள்ளார்.

இந்தநிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன் மும்பை போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

மோடியை ஆட்சியைப் புகழ்வதாக எண்ணி, பிரிட்டிஷ் அரசிடம் போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் கொச்சைப்படுத்திய நடிகை கங்கனா ரனாவத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

- உதயா

banner

Related Stories

Related Stories