இந்தியா

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண்.. நூலிழையில் உயிரைக் காப்பாற்றிய போலிஸ்!

சிவமொக்கா ரெயில் நிலையத்தில், ஓடும் ரெயிலில் இருந்து இறங்கும்போது ஒருவர் தவறி விழுந்த பெண்ணை போலிஸார் பத்திரமாக மீட்டனர்.

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண்.. நூலிழையில் உயிரைக் காப்பாற்றிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா ரயில் நிலையத்திற்கு நேற்று முன் தினம் வந்த தாளகொப்பா-பெங்களூரு இன்டர்சிட்டி ரெயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் ரயில் நிற்பதற்கு முன்பாக தலையில் சுமையுடன் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டார்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பெண்ணின் சேலை ரயிலில் சிக்கியது. மேலும் அவர் தலையில் வைத்து இருந்த சுமை தண்டவாளத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் அந்த சமயத்தில் நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஜெகதீஷ், ரெயில்வே போலிஸ்காரர்கள் அண்ணப்பா, சந்தோஷ் ஆகியோர் விரைந்து வந்து தவறி விழுந்த பெண்ணின் கை, கால்களை பிடித்து தூக்கினர். இதனால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அந்த பெண் ரெயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்ததும், அவரை ரெயில்வே போலீசார் மீட்ட காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.

banner

Related Stories

Related Stories