இந்தியா

சுட்டுக்கொல்லப்பட்டாரா மல்யுத்த வீராங்கனை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிஷா தாஹியா : நடந்தது என்ன?

நான் உயிரோடுதான் இருக்கிறேன் என மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்டாரா மல்யுத்த வீராங்கனை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிஷா தாஹியா : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய நாட்டின் இளம் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா கடந்த வாரம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். இந்நிலையில், ஹரியானாவில் உள்ள மல்யுத்த அகாடமியில் நிஷா தாஹியாவும், அவரது சகோதரர் சூரஜும் சுட்டுக் கொல்லப்பட்டதாக நேற்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இதனால் அவரது ரசிகர்களும், விளையாட்டு வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பலரும் அவருக்கு இறங்கல் தெரிவித்து சமூக ஊடங்ககளில் கருத்துக்களை தெரிவித்துவந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா, சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளிட்டுள்ள வீடியோவில், "நான் நலமாக இருக்கிறேன். தேசிய சீனியர் போட்டியில் விளையாடுவதற்காக கோண்டா நகருக்கு வந்துள்ளேன். நான் கொல்லப்பட்டதாகப் பரவி வரும் செய்தி போலியானது” என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories