இந்தியா

விராட் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது : மும்பை சைபர் க்ரைம் போலிஸ் அதிரடி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 9 மாத மகளுக்கு சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலிஸ் கைது செய்துள்ளது.

விராட் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது : மும்பை சைபர் க்ரைம் போலிஸ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2021ம் ஆண்டுக்கான T20 உலகக்கோப்பை தொடருக்கான தொடக்கப் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியுற்றது பெரும் விமர்சனத்துக்கு ஆளானது.

மேலும் இந்திய அணியின் வீரர் முகமது ஷமிதான் தோல்விக்கு காரணம் எனக் கூறி சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வசைபாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முகமது ஷமிக்கு ஆதரவாக இருப்பதாகவும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கோலியின் 9 மாத பெண் குழந்தையான வாமிகாவுக்கு சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் யாரேனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்களா எனவும் டெல்லி மகளிர் ஆணையம் நோட்டிஸ் விடுத்திருந்தது.

இந்நிலையில், விராட் கோலிக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததாக ஐதராபாத்தில் சாஃப்ட்வேட் என்ஜினியர் ஒருவரை மும்பை சைபர் க்ரைம் போலிஸ் கைது செய்துள்ளது.

அதன்படி, 23 வயதான ராம் நாகேஷ் அலிபத்தினின் என்பவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories