இந்தியா

“நாய் செத்தால்கூட இரங்கல்.. விவசாயிகள் இறந்தால் வருத்தப்படமாட்டார்கள்” : பா.ஜ.கவை விளாசிய மேகாலயா ஆளுநர்!

நாய் செத்தால்கூட இரங்கல் தெரிவிக்கும் பா.ஜ.க தலைவர்கள், 600 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை என மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் விமர்சித்துள்ளார்.

“நாய் செத்தால்கூட இரங்கல்.. விவசாயிகள் இறந்தால் வருத்தப்படமாட்டார்கள்” : பா.ஜ.கவை விளாசிய மேகாலயா ஆளுநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாய் செத்தால்கூட இரங்கல் தெரிவிக்கும் டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 600 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை என மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேகாலயா ஆளுநராக இருப்பவர் சத்ய பால் மாலிக். இவர் முன்னதாக ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்தார். பிறகு சில மாதங்கள் கோவாவின் ஆளுநராகப் பணியாற்றினார்.

இந்நிலையில், பா.ஜ.க மீது சத்ய பால் மாலிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஜெய்ப்பூரில் ஜாட் சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் ஒரு நாய் செத்தால்கூட இரங்கல் செய்தி விடுக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 600 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு வார்த்தைகூட இரங்கல் செய்தி தரவில்லை.

விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றிய அரசிலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள், ஆனால், ஒரு சிலர்தான் அகங்காரம் பிடித்து அலைகிறார்கள். நான் இப்படிப் பேசுவதால், என்னுடைய பதவி பறிபோகும் என்பது குறித்தும், ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்படுவேன் என்பது குறித்தும் எனக்கு கவலையில்லை.

எப்போது என்னை பதவியிலிருந்து விலகக் கூறினாலும் நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். டெல்லியில் போராடும் விவசாயிகள் வெறும் கைகளோடு வரமாட்டார்கள், வெற்றியுடனே வர விரும்புவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சத்ய பால் மாலிக், அம்பானி தொடர்பான கோப்புக்கும், ஆர்.எஸ்.ஸ் சார்ந்த நபரின் கோப்புக்கும் அனுமதி கொடுத்தால் தலா 300 கோடி ரூபாய் கொடுப்பதாக எனது செயலாளரிடம் பேரம் பேசினார்கள் எனத் தெரிவித்து புயலைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories