இந்தியா

அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து; கொரோனா நோயாளிகள் 10 பேர் பரிதாப பலி: பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?

அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து; கொரோனா நோயாளிகள் 10 பேர் பரிதாப பலி: பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் திடீரென இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வந்து பல மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த அவசர சிகிச்சைப் பரிவில் 25க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 10 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6க்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கள் இரங்கல் முதல்வர் உத்தவ் தாக்ரே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories