இந்தியா

“திடீரென மாயமான இளைஞர் எரித்து கொலை.. சாம்பல் கூட கிடைக்காத அவலம்” : துப்பறிய உதவியது ஒற்றைச் செருப்பு!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே இளைஞரை இரண்டு பேர் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

“திடீரென மாயமான இளைஞர் எரித்து கொலை.. சாம்பல் கூட கிடைக்காத அவலம்” : துப்பறிய உதவியது ஒற்றைச் செருப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பவ்தன் பகுதியைச் சேர்ந்த 27 வயதாகும் இளைஞர் ஒருவர் கடந்த மாதம் காணமல் போகியுள்ளார். இதனையடுத்து இளைஞரின் பெற்றோர் குறித்து புகாரின்பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தனர்.

15 நாட்கள் மேலாகியும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் அப்பகுதியில் உள்ள வீட்டின் அருகில் இளைஞரின் செருப்பு ஒன்றை போலிஸார் கண்டறிந்தனர். அதைவைத்து விசாரணை நடத்தியதில் அந்த வீட்டில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இந்த வீட்டில் உள்ள இளம் பெண்ணுக்கு இளைஞருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதுதொடர்பாக விசயம் கணவருக்கு தெரியவர, அவர் இளைஞரை வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். வீட்டிற்கு வந்த இளைஞரை நண்பரின் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, உடலை அருகில் உள்ள குடோனில் வைத்து எரித்து சாம்பலை பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளனர். இதனையடுத்து அந்த பெண், பெண்ணின் கணவர் மற்றும் நண்பரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories