இந்தியா

80 ஏக்கருக்குக் கஞ்சா செடி... தலைசுற்றிப்போன ஆந்திரா போலிஸ்: நடந்தது என்ன?

விசாகப்பட்டினத்தில் 80 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலிஸார் அழித்தனர்.

80 ஏக்கருக்குக் கஞ்சா செடி... தலைசுற்றிப்போன ஆந்திரா போலிஸ்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலத்தில் 'ஆபரேஷன் பரிவர்த்னா' என்ற பெயரில் கஞ்சா சாகுபடியைத் தடுக்கும் விதத்தில் போலிஸார் அதிரடி ஆபரேஷனில் இறங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜி மடுகுலா மண்சல் கிராமத்தில் சேட்லைட் மற்றும் ட்ரோன் உதவிகளுடன் போலிஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது 80 ஏக்கரில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருந்தைக் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலிஸார் 80 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கஞ்சா செடிகளை முழுமையாக அழித்தனர்.

இதுபோன்று நவம்பர் மாத்திற்குள் மாநிலத்தில் எங்கு எல்லாம் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு முற்றாக அழிக்கப்படும் என காவல்துறை ஆணையர் வினீத் பிரிஜ்லால் தி தெரிவித்துள்ளார்.

மேலும் கஞ்சா சாகுபடியை அழிப்பதற்கு மட்டும் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தாங்களாகவே முன்வந்து கஞ்சா பயிர் சாகுபடிகளை அழிக்க வேண்டும் எனவும் போலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories