இந்தியா

புனீத் ராஜ்குமாருக்கு இறுதி முத்தம் கொடுத்த வழியனுப்பி வைத்த கர்நாடக முதலமைச்சர்: திரைத்துறையினர் அஞ்சலி!

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புனீத் ராஜ்குமாருக்கு இறுதி முத்தம் கொடுத்த வழியனுப்பி வைத்த கர்நாடக முதலமைச்சர்: திரைத்துறையினர் அஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கன்னட உலகின் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனீத் ராஜ்குமார் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். இவரின் இறப்புச் செய்தியை அறிந்து கன்னட திரையுலகமே துக்கத்தில் மூழ்கியுள்ளது.

மேலும் புனீத் ராஜ்குமாரின் மறைவு அவரது ரசிர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டதை அறிந்த உடனே அவரது ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.

நடிகர் புனீத் ராஜ்குமாரின் மறைவை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புனீத் ராஜ்குமாரின் உடல்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது

பின்னர் இரவு 7 மணியளவில் புனீத் ராஜ்குமாரின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முதலில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்பட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று அதிகாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. புனீத் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

banner

Related Stories

Related Stories