சினிமா

“என்னால் தாங்க முடியவில்லை..” : புனித் ராஜ்குமாரின் மறைவைத் தாங்க முடியாமல் விபரீத முடிவெடுத்த ரசிகர்!

நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது ரசிகர் தற்கொலை செய்து கொண்டார்.

“என்னால் தாங்க முடியவில்லை..” : புனித் ராஜ்குமாரின் மறைவைத் தாங்க முடியாமல் விபரீத முடிவெடுத்த ரசிகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னட உலகின் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் காலமானார். இவரின் இறப்புச் செய்தியை அறிந்து கன்னட திரையுலகமே துக்கத்தில் மூழ்கியுள்ளது.

மேலும் புனித் ராஜ்குமாரின் மறைவு அவரது ரசிர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டதை அறிந்த உடனே அவரது ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.

நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புனித் ராஜ்குமாரின் உடல்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தின் பெல்காம் பகுதியில் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவைத் தாங்க முடியாத விரக்தியில் ராகுல் என்ற அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். அதேபோல புனித் ராஜ்குமார் மறைவு செய்தி அறிந்து மாரடைப்பால் முனியப்பன், பரசுராம் ஆகிய இரண்டு ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories