இந்தியா

"26% நீதிமன்றங்களில் கழிவறையில்லை": ஒன்றிய சட்ட அமைச்சர் முன்பே புள்ளி விவரத்தை அடுக்கிய தலைமை நீதிபதி!

நீதிமன்றங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

"26% நீதிமன்றங்களில் கழிவறையில்லை": ஒன்றிய சட்ட அமைச்சர் முன்பே புள்ளி விவரத்தை அடுக்கிய தலைமை நீதிபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் சுமார் 26% நீதிமன்றங்களில் பெண்களுக்காகத் தனி கழிப்பறை வசதி இல்லை என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.

மும்பை உயர் நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று புதிய நீதிமன்ற கட்டிடத்தை தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா," இந்தியாவில் உள்ள நீதிமன்ற கட்டிடங்கள் இன்னும் பாழடைந்த கட்டமைப்புகளுடன் செயல்படுகின்றன. இதனால் நீதிமன்றம் திறம்படச் செயல்படுவது கடினமாக உள்ளது.

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் 5% நீதிமன்ற வளாகங்களில் மட்டுமே அடிப்படை மருத்துவ உதவிகள் உள்ளது. 26% நீதிமன்றங்களில் பெண்களுக்குத் தனி கழிப்பறைகள் இல்லை. 16% நீதிமன்றங்களில் ஆண்களுக்குக் கழிப்பறைகள் இல்லை.

"26% நீதிமன்றங்களில் கழிவறையில்லை": ஒன்றிய சட்ட அமைச்சர் முன்பே புள்ளி விவரத்தை அடுக்கிய தலைமை நீதிபதி!

மேலும் 50% நீதிமன்ற வளாகங்களில் நூலகம் இல்லை. 46% நீதிமன்ற வளாகங்களில் தண்ணீரைச் சுத்திகரிக்கும் வசதி இல்லை. நீதிமன்ற உள்கட்டமைப்பு குறித்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். விரைவில் இதற்குப் பதில் வரும் என நான் எதிர்ப்பார்க்கிறேன். மேலும் நீதிமன்ற கட்டமைப்புகளை மேம்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய சட்ட அமைச்சர் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் கலந்து கொண்டார். மேடையில் ஒன்றிய அமைச்சர் அமர்ந்து இருக்கும்போதே நீதிமன்ற கட்டமைப்புகள் குறித்து தலைமை நீதிபதி குற்றச்சாட்டு வைத்துப் பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories