இந்தியா

பா.ஜ.க-வில் ஷாருக்கானை சேர்ப்பதற்கு திட்டமா? : மகாராஷ்டிரா அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நடிகர் ஷாருக்கான் பா.ஜ.கவில் சேர்ந்துவிட்டால் போதைப்பொருள் எல்லாம் சர்க்கரையாக மாறிவிடும் என மகாராஷ்டிரா அமைச்சர் சஹாஜன் புஜ்பால் பேசியுள்ளார்.

பா.ஜ.க-வில் ஷாருக்கானை சேர்ப்பதற்கு திட்டமா? : மகாராஷ்டிரா அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரைப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு குறித்தான விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் ஆர்யன்கானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நடிகர் ஷாருக்கான் சிறைக்குச் சென்று மகன் ஆர்யன்கானை சந்தித்து பேசினார். பின்னர், ஷாருக்கான் வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

இதையடுத்து வழக்கு தொடர்பான ஆதாரம் குறித்துச் சேகரிக்க வந்ததாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் பா.ஜ.கவில் இணைந்தால் போதை பருந்து சர்க்கரையாகிவிடும் என பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பா.ஜ.க-வில் ஷாருக்கானை சேர்ப்பதற்கு திட்டமா? : மகாராஷ்டிரா அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சக்கன் பூஜ்பால், "சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டவர்களின் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் ஒருவர்.நடிகர் ஷாருக்கான் மட்டும் பா.ஜ.கவில் சேர்ந்துவிட்டால் போதைப் பொருள் சர்க்கரை தூயாக மாறிவிடும்.

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ஒரு பெரிய அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்குப் பதில் நடிகர் ஷாருக்கானை வேட்டையாடுகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories