இந்தியா

“T20 பேட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட வேண்டுமா?” : ஒன்றிய அமைச்சர் சர்ச்சை பேச்சு !

டி.20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஒன்றிய அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 “T20 பேட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட வேண்டுமா?” :  ஒன்றிய அமைச்சர் சர்ச்சை பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 7வது டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 17ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணியுடன், இந்திய அணி வருகிற 24ம் தேதி விளையாடுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அந்த போட்டியை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், டி.20 போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில்,”ஜம்மு -காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 18 நாட்களில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உறவுகள் தற்போது நன்றாக இல்லை. இதனால் டி.20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சால் டி.20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories