இந்தியா

ஆவணம் கேட்ட போலிஸ்காரரை கடத்திச் சென்ற கொள்ளையன்.. உ.பி காவலருக்கு நேர்ந்த கொடூரம் - என்ன நடந்தது?

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் போலிஸாரை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவணம் கேட்ட போலிஸ்காரரை கடத்திச் சென்ற கொள்ளையன்.. உ.பி காவலருக்கு நேர்ந்த கொடூரம் - என்ன நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா அருகே கோதி பச்சேடா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சச்சின் ராவல். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கார் விற்பனை மையத்தில் இருந்து மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரை ஓட்டிப் பார்க்க எடுத்துச் சென்றுள்ளார்.

ஆனால் ஷோரூமுக்கு மீண்டும் காரைக் கொண்டுவராமல் அப்படியே காரை கொள்ளையடித்துச் சென்றுள்ளார் ராவல். இதனையடுத்து காரை திருடியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், காரை திருடிச் சென்ற ராவல் பக்கத்து வீட்டுக்காரரின் கார் நம்பரையே திருடிய காருக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி சுராஜ்பூரில் போக்குவரத்து போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ராவல் காரை, விரேந்தர சிங் என்ற போலிஸ்காரர் மறித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது காரின் ஆவணங்களை கேட்டபோது, போனில் போலியாக தயாரித்து வைத்திருந்த ஆவணத்தைக் காட்டியுள்ளார்.

ஆனால் பேப்பர் ஆவணங்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என விரேந்தர் சிங் கூற, மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் போலிஸார் விரேந்தர் சிங்கை காருக்குள் இழுத்துவிட்டு, காரை ஓட்டிச் சென்றுள்ளார். சுமார் 15 கி.மீ தூரம் சென்ற பிறகு ஓடும் காரில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனையடுத்து ராவல் மீது போலிஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories