இந்தியா

நாடு கடத்தப்பட்டவருக்கு தேசியக்கொடியுடன் தடபுடல் வரவேற்பு... பா.ஜ.க முதல்வருக்கு தொடர்பு - பின்னணி என்ன?

சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் 6 மாத சிறைத்தண்டனை பெற்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட விஷால் ஜூட்டுக்கு ஹரியானாவில் தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டதால் பரபரப்பு!

நாடு கடத்தப்பட்டவருக்கு தேசியக்கொடியுடன் தடபுடல் வரவேற்பு... பா.ஜ.க முதல்வருக்கு தொடர்பு - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஹரியானாவைச் செந்த 24 வயது இளைஞரான விஷால் ஜூட், ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் இந்தாண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சீக்கியர்களை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் உச்சமடைந்திருந்தபோது ஆஸ்திரேலியாவில் சீக்கியர்களுடன் விஷால் ஜூட் உள்ளிட்ட இந்துத்வா கும்பல் மோதலில் ஈடுபட்டதால் அவர் ஆஸ்திரேலிய போலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றத்திற்காக 12 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் விரைவாக அவர் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

இதற்கிடையே ஹரியானா பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார் கடந்த ஜூன் மாதம் விஷால் ஜூட்டை விடுவிக்குமாறு ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், தண்டனை வழங்கப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட விஷால் ஜூட்டுக்கு அவரது சொந்த மாநில ஹரியானாவில் தேசியக் கொடியுடன் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஷால் ஜூட்டுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதன் பின்னணியில் பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார், கர்னல் எம்.பி சஞ்சய் பாட்டியா உள்ளிட்ட பா.ஜ.கவினரின் ஆதரவு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் ஜூட் விவகாரம் தொடர்பாகவே மனோகர் லால் கட்டார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பலமுறை பார்த்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories