இந்தியா

“காவி சால்வை அணிந்து விஜயதசமியை கொண்டாடிய காவலர்கள்” : உ.பியாக மாறும் கர்நாடகா - பின்னணி என்ன?

காவி சால்வைகள் அணிந்து போலிஸார் விஜயதசமி பண்டியைக் கொண்டாடியது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“காவி சால்வை அணிந்து விஜயதசமியை கொண்டாடிய காவலர்கள்” : உ.பியாக மாறும் கர்நாடகா - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலத்தில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் விஜயபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் தலைமையில், பணியாற்றும் காவலர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் விஜயதசமி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

அப்போது, போலிஸார் அனைவரும் வெள்ளை பைஜாமா குர்த்தா மற்றும் காவி நிற சால்வைகளை அணிந்திருந்தனர். இந்த உடையுடன் போலிஸார் குழுப் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்பினரைப் போல் போலிஸார் எப்படிக் காவி நிறத்திலான சால்வை அணிந்தனர் என பலரும் சமூகவலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதேபோல், காவி நிற சால்வை அணிந்து மறைமுகமாக பா.ஜ.கவின் சர்வாதிகார ஆட்சிக்கு கர்நாடக போலிஸார் துணையாக இருக்கிறார்களா என கேள்வி எழுப்பி, எப்படி இவர்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories