இந்தியா

“இனி எந்த தப்பும் பண்ண மாட்டேன்” : கவுன்சிலிங் போது கதறி அழுத ஷாருக்கானின் மகன்: நடந்தது என்ன?

இனி தவறான வழியில் செல்லமாட்டேன் என நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான தெரிவித்துள்ளார்.

“இனி எந்த தப்பும் பண்ண மாட்டேன்” : கவுன்சிலிங் போது கதறி அழுத ஷாருக்கானின் மகன்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையில் சொகுசுக் கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 17 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆர்யன்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு அக்டோபர் 14ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை அக்டோபர் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையடுத்து சிறையில் இருக்கும் ஆர்யகன் உள்ளிட்ட 17 பேருக்கும் போதைப் பொருள் தடுப்பு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே மற்றும் சமூக ஆர்வலர்கள் கவுன்சிலிங்க கொடுத்தனர்.

அப்போது, “ஆர்யன்கான் தனது பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் இனி நடந்து கொள்ள மாட்டேன். இனி தவறான வழியில் செல்லமாட்டேன். சிறையிலிருந்து வெளியே சென்றதும் ஏழை மக்களுக்கு உதவுவேன்” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெற்றோருடன் வீடியோ காலில் பேச போலிஸார் ஆர்யன்கானுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். போனில் நடிகர் ஷாருக்கானுடன் பேசும் ஆர்யன்கான் கதறி அழுததாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories