இந்தியா

"135ல் 115 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இல்லை": அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

115 அனல்மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய மின்சார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

"135ல் 115 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இல்லை": அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் விரைவில் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதேபோல், மாநில முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி, சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் தங்கள் மாநிலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசுக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மணி நேரம் தினமும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதேபோல் இன்று முதல் பஞ்சாப் மாநிலத்தில் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என அம்மாநில அரசு இரண்டு தினங்களுக்கு முன்பே அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் 115 மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் 115 நிலையங்களில் நிலக்கரிக்குக் கடுமையான கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவற்றில் 17 நிலையங்களில் ஒரு நாளைக்கும் தேவையான நிலக்கரிக்கூட இருப்பு இல்லை. 26 நிலையங்களில் ஒருநாள் உற்பத்திக்கு மட்டுமே இருப்பு உள்ளது. அதேபோல் 22 நிலையங்களில் 2 நாளைக்கும், 18 நிலையத்தில் மூன்று நாளைக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது. இதனால் 115 அனல் மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து நிலக்கரி குறித்து வெளியாகும் தகவல்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரம் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து ஒன்றிய பா.ஜ.க அரசு உண்மையை மறைத்து பொய்யான காரணங்களை வெளியே சொல்லி வருகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories