ஒன்றரை ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வருகிறது கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று நோய்.
இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா என வளர்ந்த வளர்ந்து வரும் நாடுகள் இந்த கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகளில் இருந்து மெல்ல மெல்ல எழத் தொடங்கி இருக்கின்றன.
இருப்பினும் கொரோனா வைரஸ் அவ்வப்போது தனது மரபணுவை மாற்றிக்கொண்டு புது உருவம் கொண்டு மீண்டும் மீண்டும் தனது பரவலை நீட்டித்து வருகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனா பரவலை தடுக்கலாம் என்று உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தும் பணியில் தீவிரம் காட்டின.
தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும் அதனையும் மீறி உருமாற்றம் அடைந்த கொரோனாவில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பூஸ்டர் தடுப்பூசிக்கும் மருத்துவ அறிஞர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில், யாருக்கெல்லாம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளது.
அதில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கே இந்த பூஸ்டர் தடுப்பூசி போடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.