இந்தியா

எந்நேரமும் படிப்பா? பிக்னிக் அழைத்துச் செல்லாததால் விரக்தி; வீட்டிலிருந்து வெளியேறிய பெங்களூரு மாணவர்கள்!

பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் இருந்து தங்கள் வீட்டுக்கு தெரியாமல் வெளியில் வந்து பின்னர் ஹாவேரி, பெலகாவி, மைசூரு, அரிசிகரே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றியிருக்கிறார்கள்.

எந்நேரமும் படிப்பா? பிக்னிக் அழைத்துச் செல்லாததால் விரக்தி; வீட்டிலிருந்து வெளியேறிய பெங்களூரு மாணவர்கள்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூரு சோழதேவனஹள்ளி காவல் எல்லைக்குட்பட்ட ஏ.ஜி.பி லே அவுட் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த மூன்று குழந்தைகள் உட்பட 4 பேரை மங்களூரு மாநகர போலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

இவர்கள் சந்தேகத்திற்கிடமாக சாலையில் நடந்து சென்றதைப் பார்த்த போலிசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர்கள் அனைவரும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் இருந்து தங்கள் வீட்டுக்கு தெரியாமல் வெளியில் வந்து பின்னர் ஹாவேரி, பெலகாவி, மைசூரு, அரிசிகரே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றி விட்டு பின்னர் மங்களூரு வந்ததாக தெரிவித்தனர்.

போலிஸார் இவர்கள் அனைவரையும் பாண்டேஸ்வர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டபோது பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் என்பதும் அமிர்தவர்ஷினி (வயது 21), பூமி (வயது 12), சிந்தன் (வயது 12), ராயண் (வயது 12) என தெரியவந்தது.

இவர்களின் பெற்றோர் இவர்களை படிப்பில் அதிக கவனம் செலுத்தச் சொல்லி தொடர்ந்து அறிவுறுத்தியதாகவும், சுற்றுலா அழைத்துச் செல்ல பெற்றோரிடம் கூறியும் அவர்கள் அழைத்து செல்லாததால் நாங்களே புறப்பட்டு ஊரை சுற்றி வந்தோம் என்றும் அந்த குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்தவுடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என போலிஸார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக அவருடன் வந்த இருபத்தொரு வயது பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என மங்களூரு மாநகர சட்டம் ஒழுங்கு இணை போலிஸ் கமிஷனர் ஹரிராம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories