இந்தியா

“இதுதான் அடுத்த நகைச்சுவை” மோடி, அமித்ஷாவை விமர்சித்த டென்னிஸ் வீராங்கனை - கதறும் பா.ஜ.க.வினர்!

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை விமர்சித்து அமெரிக்க முன்னாள் டென்னிஸ் வீராங்கனையின் ட்வீட் வைரலாகி வருகிறது.

“இதுதான் அடுத்த நகைச்சுவை” மோடி, அமித்ஷாவை விமர்சித்த டென்னிஸ் வீராங்கனை - கதறும் பா.ஜ.க.வினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி குறித்து தொலைக்காட்சி ஒன்றியில் பேசியிருந்தார். இவரின் இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு அமெரிக்க முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா ஒரு ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்தப் பதிவு தற்போது இந்தியாவில் வைரலாகி வருகிறது.

முன்னதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி கொடுத்திருந்தார். அதில், "எங்களைச் சிலர் சர்வாதிகாரி என கூறிவருகிறார்கள். மோடி போன்று கருத்துகளுக்குக் காது கொடுப்பவரை நான் பார்த்ததில்லை.

அனைவரது கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப்பார். ஒரு விஷயத்தில் இவ்வளவு யோசிக்க என்ன இருக்கிறது என்று நாங்கள் அடிக்கடி நினைப்போம். ஆனால் பல முறை யோசித்தே மோடி முடிவை எடுப்பார்" என தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த பேச்சைத்தான் டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். தனது ட்விட்டரில், மோடி குறித்து அமித்ஷா பேட்டியை இணைத்து, “இது தமக்கான அடுத்த நகைச்சுவை" என பதிவிட்டுள்ளார்.

மார்டினா நவ்ரதிலோவா இந்த ட்வீட் தற்போது இந்தியாவில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் அவரது ட்விட்டை சேர் செய்து, அவருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் சரியான பதிலடி என்றும், இனி இந்தியப் பிரபலங்கள் அவரை வம்புக்கு இழுப்பார்கள் எனவும் பதிவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories