இந்தியா

“சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 9 நாட்களில் தீர்ப்பு” : நீதிமன்றம் அதிரடி - என்ன காரணம்?

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 9 நாட்களில் தீர்ப்பு” : நீதிமன்றம் அதிரடி - என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்திற்குட்பட்ட கோத்வடா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த செப்டம்பர் 26ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கமலேஷ் என்ற இளைஞர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் கழுத்தை நெரித்து சிறுயை கொலை செய்யவும் முயற்சித்துள்ளார்.

பின்னர், அந்த இளைஞரின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் கமலேஷை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஜெய்பூர் தெற்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை கமலேஷ் பாலியல் வன்கொடுமை செய்தது ஆதாரங்களுடன் நிறுபனமாகியுள்ளது. எனவே 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டு, போக்சோ நீதிமன்றம் மிக விரைவாக விசாரணை நடத்தி 9 நாட்களிலேயே தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைந்து செயல்பட்ட போலிஸாருக்கும், நீதித்துறைக்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories