இந்தியா

“PM Cares நிதியம் தனியாருடையது என்றால் அரசு முத்திரை ஏன்?” - ஆதாரங்களை அடுக்கி வாதாடிய மூத்த வழக்கறிஞர்!

பி.எம்.கேரில் ஒன்றிய அரசின் முத்திரை பதியப்பட்டுள்ளது. அரசு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. தனியார் நிறுவனம் என்றால் இவற்றைப் பயன்படுத்துவது அனைத்தும் விதிமீறல் குற்றம்.

“PM Cares நிதியம் தனியாருடையது என்றால் அரசு முத்திரை ஏன்?” - ஆதாரங்களை அடுக்கி வாதாடிய மூத்த வழக்கறிஞர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பி.எம்.கேர் நிதியின் செயல்பாடுகள் அனைத்தும், அரசியல் சாசனப்பிரிவு 12ன் படி அதனை பொது நிதியாக அறிவிக்கலாம் என்பதை உறுதிபடுத்துகிறது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆதாரங்களை அடுக்கி வாதாடியுள்ளார்.

பி.எம்.கேர் நிதியை அரசின் பொது நிதியாக அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு அது தனியார் நிதி என்று கூறியது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பி.எம்.கேர் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கில் வாதங்கள் தொடங்கியது. அப்போது, ஒன்றிய அமைச்சர்கள், துணை குடியரசு தலைவர் உள்ளிட்ட அனைவரும் இது இந்திய அரசின் முன்னெடுப்பு என்றே குறிப்பிட்டு வந்தனர்.

பி.எம்.கேர் நிதி இந்திய அரசின் நிதி என்றுதான் உலகுக்கு தெரிவிக்கப்பட்டது. பி.எம்.கேர் நிதியின் அலுவலகம் பிரதமரின் அலுவலகத்தில்தான் இயங்குகிறது. பிரதமரின் அதிகாரிகள்தான் அதன் அன்றாட பணிகளைக் கவனிக்கிறார்கள். பிரதமர் அலுவலகம்தான் அதனை இயக்குகிறது. அப்படி இருக்கும்போது அதனை எப்படி தனியார் நிதி என்று கூற முடியும்?

பி.எம்.கேரில் ஒன்றிய அரசின் முத்திரை பதியப்பட்டுள்ளது. அரசு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. தனியார் நிறுவனம் என்றால் இவற்றைப் பயன்படுத்துவது அனைத்தும் விதிமீறல் குற்றம். அரசியல் சாசன உறுதிமொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள்தான் அதன் நிர்வாகிகளாக உள்ளனர். அதன் தலைவராக பிரதமர் உள்ளார்.

எனவே, இதனை ஒன்றிய அரசின் பொது நிதியாக அறிவித்து உத்தரவிட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிட்டார். இதனையடுத்து, வழக்கு அக்டோபர் 18ம் தேதி தொடர் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories