இந்தியா

ஓசியில் மது கேட்டு அலப்பறை.. தரமறுத்ததால் கடையைச் சூறையாடிய கும்பல் : புதுச்சேரியில் பரபரப்பு!

புதுச்சேரியில் இலவசமாக மது கேட்டு மது கடையை சூறையாடிய இளைஞர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

ஓசியில் மது கேட்டு அலப்பறை.. தரமறுத்ததால் கடையைச் சூறையாடிய கும்பல் : புதுச்சேரியில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் தனியார் மதுக்கடை ஒன்று அமைந்துள்ளது. நேற்று இரவு அங்கு வந்த மூன்று வாலிபர்கள் தங்களுக்கு இலவசமாக மது வேண்டும் என கடைக்காரரிடம் முறையிட்டுள்ளனர்.

இதற்குக் கடையிலிருந்தவர் "காசு கொடுத்தால்தான் மது, இலவசமாகக் கொடுக்க முடியாது" என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இந்த கும்பல் கடையின் ஓரமாக இருந்த காலி மது பாட்டில்களை எடுத்து கடைமீது வீசினர்.

மேலும், நாற்காலிகளை உடைத்துச் சேதப்படுத்தினர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலிஸார் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதையடுத்து போலிஸார் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது மதுக்கடையைச் சூறையாடியது ரஞ்சித், பிரபா, ஸ்டீபன் என தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் போலிஸார் தேடிவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories