இந்தியா

இளம் மனைவியை ரூ.500க்கு விற்ற கணவன்... பாலியல் வல்லுறவு செய்த நண்பன்... குஜராத்தில் கொடூர சம்பவம்!

குஜராத்தில் தன் மனைவியை 500 ரூபாய்க்கு கணவனே விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் மனைவியை ரூ.500க்கு விற்ற கணவன்... பாலியல் வல்லுறவு செய்த நண்பன்... குஜராத்தில் கொடூர சம்பவம்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ரூ.500க்கு தன் மனைவியையே கணவன் விற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 21 வயதான பெண் ஒருவர் தன் கணவர் தன்னை வேறொரு நபரிடம் ரூ.500க்கு விற்றதாக போலிஸால் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில், “இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு 9 மணிக்கு நானும் என் கணவரும் உணவகத்திற்குச் சென்றோம். அப்போது அங்கு வந்த நபர் என் கணவரிடம் ரூ. 500 கொடுத்தார்.

இதையடுத்து என் கணவர் என்னை அந்த நபருக்கு விற்றுவிட்டார். பின்னர் அவர் என்னை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரையடுத்து பெண்ணின் கணவர் தீரஜ் ஜாங்கிட் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட சோனு சர்மா ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் சிகார் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கணவனே மனைவியை தனது நண்பரிடம் ரூ. 500க்கு விற்ற இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories