இந்தியா

"கட்டையை எடுங்க.. விவசாயிகளை அடிங்க" : வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க முதல்வர்!

போராடும் விவசாயிகளுக்கு எதிராகக் கட்டைகளைக் கையில் எடுங்கள் என ஹரியானா முதல்வர் பேசியதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

"கட்டையை எடுங்க.. விவசாயிகளை அடிங்க" : வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூர் பகுதியில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் மகனை கைது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இந்நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராகத் தடியைக் கையில் எடுங்கள் எனப் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், பா.ஜ.க விவசாய பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் முதல்வர் கட்டார் விவசாயிகளுக்கு எதிராக இந்த சர்ச்சை கருத்தைப் பேசியுள்ளார். அதில், "பா.ஜ.க விவசாயப் பிரிவினர் 1000 பேர் கொண்ட குழுவை அமையுங்கள். போராடும் விவசாயிகளைப் பழிவாங்கும் செயலை நீங்களும் செய்யுங்கள்.

விவசாயிகளுக்கு எதிராகத் தடியெடுங்கள். இதனால் சிறைத்தண்டனை கிடைக்க நேரிட்டாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் பெரிய தலைவர்களாவீர்கள். வரலாற்றில் உங்கள் பெயர் பொறிக்கப்படும்" எனப் பேசியுள்ளார்.

இவரது இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல்வர் மனோகர்லால் கட்டாரின் வன்முறையைத் தூண்டும் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories