இந்தியா

ஆள்மாறாட்டம்,கேள்வித்தாள் கசிவு என அதிக அளவில் முறைகேடுகள்:நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ரிட்மனு தாக்கல்!

நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம்,கேள்வித்தாள் கசிவு என அதிக அளவில் முறைகேடுகள்:நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ரிட்மனு தாக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வை ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. இந்த தேர்வின் மூலமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டு தோரும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

மேலும் நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு கானல் நீராகிவிடுவதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட்தேர்வு கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்றது. இதில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட பல மோசடிகள் நடந்தன.

தேர்வு நடைபெற்ற மையங்களின் மேற்பார்வையாளர்கள் உதவியுடன் ஆள்மாறாட்டம் நடத்தித் தேர்வுகள் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் மருத்துவம் படித்துவரும் மாணவர்கள், கோச்சிங் நிறுவனங்களும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் ரூ. 50 லட்சம் வரை பேரம் பேசி மோசடிகள் நடத்தப்பட்டிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து வழக்குகளைப் பதிவு செய்து பலரைக் கைது செய்துள்ளது. இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் தற்போது நடைபெற்று வரும் விசாரணை விபரங்களை சி.பி.ஐ ஒருவாரத்தில் அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories