இந்தியா

“பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய காவலர்” : கர்நாடகாவில் நடந்த கொடூரம்!

கர்நாடகா மாநிலத்தில் பாலியல் புகார் அளிக்க வந்த 16 வயது சிறுமியை காவலரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய காவலர்” : கர்நாடகாவில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடகா மாநிலத்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டு தன்னை வன்கொடுமை செய்தவன் மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றுள்ளார். ஆனால் காவல் நிலையத்தில் இருந்த காவலர் விசாரணை நடத்துகிறேன் என்ற போர்வையில், அடிக்கடி சம்மன் கொடுக்கச் சென்ற சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி போகும்போது, அதே பெண்ணை தானும் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய சம்பவம் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே கடபா பகுதியில் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் கடப்பா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சிவராஜ். காவலர் சிவராஜ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக வழக்குகள் முடிந்து இருந்தாலும், மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். மேலும் சிறுமியிடன் ஆசை வார்த்தை கூறியும் மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் தற்போது சிறுமி 5 மாத கர்ப்பிணி ஆனார்.

இந்நிலையில், சிறுமியின் கர்ப்பம் அறிந்த பெற்றோர் விசாரணை மேற்கொண்டபோது, காவலர் சிவராஜ் தான் தனக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சிவராஜை தொடர்பு கொண்டு கேட்ட போது, தன்னால் திருமணம் செய்ய இயலாது. வேண்டுமெனில் கர்ப்பத்தை களைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்

“பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய காவலர்” : கர்நாடகாவில் நடந்த கொடூரம்!

அதனைத் தொடர்ந்து கடந்த 18ம் சிறுமியும் அவரது தாயாரும் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். பிறகு இதுவரை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்ற சிறுமியின் தாயார், தன் கணவருக்கு போன் செய்து போலிஸ்காரர் சிவராஜ் 35 ஆயிரம் ரூபாய் கர்ப்பத்தை கலைக்க செலவுக்காக ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார் என்ற விவரத்தை மட்டும் தெரிவித்துக் கூறப்படுகிறது.

ஆனால், எங்கு இருக்கிறேன் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை தற்போது, முதலமைச்சர் அலுவலகத்திற்கும் கடப்பா காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்கப்பட்டதனை தொடர்ந்து, கடபா போலிஸார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்து செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories