இந்தியா

“மாணவர்கள் முன் குடித்து விட்டு வகுப்பறையில் தூங்கிய தலைமை ஆசிரியர்” : சட்டீஸ்கரில் நடந்த அவலம்!

சட்டீஸ்கர் மாநிலத்தில், குடித்து விட்டு வகுப்பறையிலேயே தலைமை ஆசிரியர் தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மாணவர்கள் முன் குடித்து விட்டு வகுப்பறையில் தூங்கிய தலைமை ஆசிரியர்” : சட்டீஸ்கரில் நடந்த அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்ததை அடுத்து ஒரு வருடத்திற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் குடித்து விட்டு வகுப்பறையில் தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம், கரிமடி என்ற கிராமத்தில் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ராம்நாராயண் பிரதான் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று தலைமை ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்கள் முன்பே குடித்துவிட்டு, மது போதையில் அங்கேயே படுத்துத் தூங்கியுள்ளார். இதைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து அதிகாரிகள் அவரை இடைநீக்கம் செய்துள்ளனர்.

மேலும் ஆசிரியரின் இந்த நடவடிக்கைக்குப் பெற்றோர்கள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியர் இப்படி நடந்தது முதல்முறை அல்ல என்றும் இவர் இதை வழக்கமாகச் செய்து வருவதாகவும் அப்பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories