இந்தியா

“மோடியின் புகைப்படத்தை அகற்றுங்கள்” : என்.ஐ.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கவேண்டும் என என்.ஐ.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“மோடியின் புகைப்படத்தை அகற்றுங்கள்” : என்.ஐ.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேசிய தகவல் மையம் சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளின் அனைத்து மென்பொருட்களும் வடிவமைக்கப்படுகின்றன. இதன்படி நீதிமன்றங்களுக்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சலையும் தேசிய தகவல் மையமே வடிவமைத்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களில் பிரதமர் மோடியின் புகைப்படமும், ஒன்றிய அரசின் முழக்கமான சப்கா சத் சப்கா விகாஸ் என்ற வாசகமும் இடம்பெறும் வகையில் தேசிய தகவல் மையம் வடிவமைத்துள்ளது.

இதையடுத்து, பிரதமர் மோடியின் புகைப்படம், வாசகங்களை நீக்க உடனடியாக என்.ஐ.சி அமைப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மின்னஞ்சலின் கீழ்ப்பகுதியில் குறிப்பிடப்பட்டதற்கும், உச்சநீதிமன்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் உச்சநீதிமன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories