இந்தியா

“அடுத்த மாதம் நிச்சயதார்த்தம்..” : காதலனுடன் சென்ற இளம் நடிகை நீரில் மூழ்கி பலி!

காதலனுடன் சுற்றுலா சென்ற நடிகை கார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அடுத்த மாதம் நிச்சயதார்த்தம்..” :  காதலனுடன் சென்ற இளம் நடிகை நீரில் மூழ்கி பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாரத்தி மற்றும் இந்தி மொழியில் படங்களை நடித்து வந்தவர் ஈஸ்வரி தேஷ்பாண்டே. தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துகொண்டவர் நடிகை ஈஸ்வரி.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி தனது காதலன் சுப்பம் டெஜுடன் கோவாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது சில நாட்கள் அங்கு பயணம் செய்துவிட்டு, நேற்று முன்தினம் இருவரும் மும்பை திரும்பியுள்ளனர். அப்போது கோவா மாநிலத்தின் அர்போரா என்ற பகுதியில் காரை வேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள குட்டையில் மூழ்கியது.

காரின் சீட் பெல்ட் லாக் ஆனதால் நீரில் இருந்து இருவராலும் வெளிவர முடியாம் போனது. இதனால் ஈஸ்வரி மற்றும் அவரது காதலன் சுப்பம் டெஜ் இருவரும் நீரில் மூழ்கி உயிழந்தனர். இவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயர்த்தம் நடக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலயில் இரண்டு பேருமே உயிரிழந்த சம்பவம் பெர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories