இந்தியா

“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் மனைவி குளிக்கவில்லை என கணவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மனைவி குளிக்கவில்லை என விவாகரத்து கோரிய கணவர்” : உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோத வழக்கு - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் சண்டூஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தனது மனைவி தினமும் குளிப்பதில்லை என அவரது கணவர் விவாகரத்து கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மகளிர் பாதுகாப்பு பிரிவுக்கு எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அந்த பெண் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது கணவர் நான் தினமும் குளிக்கவில்லை என விவாகரத்து கேட்கிறார். ஆனால், எனக்கு இந்த திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ள விரும்பம் இல்லை; அவருடன் சேர்ந்து வாழ விரும்பிகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணின் கணவரிடம் கேட்டபோது, என் மனைவியை தினம்தோறும் குளிக்கச் சொன்னால் சண்டை போடுகிறார். எனவே அவருடன் வாழவிருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் இரண்டு பேரையு அழைத்த குடும்ப நலத் துறையினர் அவர்களுக்கு அறிவுரைகள் கூறி, குளிக்கவில்லை என்பதெல்லாம் விவாகரத்து பெற தகுந்த காரணம் இல்லை எனக் கூறி, அவர்கள் இருவருக்கும் கால அவகாசம் அளித்துள்ளனர். மனைவி குளிக்கவில்லை என கணவர் விவாகரத்து கோரியுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories