இந்தியா

இது என்ன பொது சொத்தா? PM cares நிதி குறித்து மோடி அரசு கூறிய பதிலால் அதிர்ச்சி!

பிரதமரின் குடிமக்களுக்கான அவசரகால நிவாரண நிதியான பி.எம் கேர் நிதி பொது நிதி அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

இது என்ன பொது சொத்தா? PM cares நிதி குறித்து மோடி அரசு கூறிய பதிலால் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கிய போது பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆகியோர் பல ஆயிரம் கோடி நிதிவழங்கினர்.

இதனை ஏற்கனவே உள்ள பிரதமரின் நிவாரண நிதியில் சேர்க்காமல் பி.எம்.கேர் நிதி என்று தனி கணக்கு உருவாக்கப்பட்டு அதில் சேர்கப்பட்டுள்ளது. அதனை அரசின் தணிக்கைக்கு உட்படுத்தாமல் தனியார் மூலம்தான் தணிக்கை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பணத்தை அரசியல் சாசனப்பிரிவு 12-ன் படி பொது நிதியாக அறிவிக்க வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் உறுப்பினர்களாக உள்ள நிதியத்தின் தகவல்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், இந்த நிதியம் வெளிப்படைத் தன்மையுடன்தான் இயங்கிறது. அதன் விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, அறக்கட்டளையின் பெயரில் இயங்கும் பி.எம்.கேர் நிதியை பொது நிதிக்கு மாற்ற முடியாது. தகவல் அறியும் சட்டத்தின் படி அதன் விபரங்களை மூன்றாவது நபருக்கு வழங்க முடியாது என்று கூறியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

banner

Related Stories

Related Stories