இந்தியா

Sony உடன் இணையும் Zee Entertainment: நிர்வாக இயக்குநராகும் புனித் கோயங்கா- பங்கு சந்தையில் ஏற்றம்கண்ட ஜீ!

ஜீ எண்டர்டெயின்மெண்ட், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்ஸ் இந்தியா இடையே இணைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

Sony உடன் இணையும் Zee Entertainment: நிர்வாக இயக்குநராகும் புனித் கோயங்கா- பங்கு சந்தையில் ஏற்றம்கண்ட ஜீ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜீ நிறுவனம் 10 மொழிகளில், 100 க்கும் மேற்பட்ட சேனல்களுடன் 190 நாடுகளில் பார்க்கப்படுகிறது. சோனிக்கு இந்தியாவில் 31 சேனல்கள் உள்ளன. இவை 167 நாடுகளில் பார்க்கப்படுகின்றன. சோனி, நாட்டில் 700 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜீ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்ஸ் இந்தியா நிறுவனங்கள் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடக உலகின் முக்கியமான இரண்டு நிறுவனங்கள் இணையவிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இந்த இணைப்புக்குப் பிறகு இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக புனித் கோயங்கா இருப்பார் என்றும், இணைப்புக்குப் பிறகு, சோனி என்டர்டெயின்மென்ட் வசம் பெரும்பான்மையான பங்குகள் இருக்கும்.

ஜீ எண்டர்டெயின்மென்ட்டுக்கு 47.07% பங்குகள் இருக்கும் என்றும் சோனி பிக்சர்ஸிடம் 52.93% பங்குகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் அடுத்த 90 நாட்களில் நிறைவு செய்யப்படும் என்றும், டி.வி வணிக, டிஜிட்டல் சொத்துக்கள், உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு நூலகங்கள் ஆகிய இரண்டும் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலையடுத்து பங்குச்சந்தையில் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 20% அதிகரித்து அப்பர்ன் சர்க்யூட் ஆகியுள்ளது.

banner

Related Stories

Related Stories