இந்தியா

“நல்லா பார்த்தீங்களா ஜீ... அது முதலைதானா? ” : man vs wild மோடியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !

‘Man vs Wild’ நிகழ்ச்சியில் மோடியின் முதலைக் கதையைக் கேட்ட பலரும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

“நல்லா பார்த்தீங்களா ஜீ... அது முதலைதானா? ” : man vs wild மோடியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டிஸ்கவரி சேனலின் மிகப் பிரபலமான 'மேன் vs வைல்டு' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார். உத்தராகண்ட் மாநிலம், ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் மோடியும், பியர் க்ரில்ஸும் பயணம் செய்த ‘மேன் vs வைல்ட்’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு உலகம் முழுவதும் ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்த சமயத்தில் நடைபெற்றது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸ் ஆங்கிலத்தில் பேச, மோடி இந்தியில் பேசிக் கொண்டிருந்தது பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

‘மேன் vs வைல்ட்’ நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றதை நெட்டிசன்கள் பலர் கலாய்த்தனர். அதிலும், முதலைக் குட்டியை வீட்டிற்குத் தூக்கி வந்ததாக மோடி சொன்னது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெருவாரியான மக்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

“நல்லா பார்த்தீங்களா ஜீ... அது முதலைதானா? ” : man vs wild மோடியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !

உங்கள் அனுபவத்தில் முதலையைப் பார்த்துள்ளீர்களா என பியர் க்ரில்ஸ் மோடியிடம் கேட்டதற்கு, “சிறுவயதில் குளத்தில் தான் குளிப்போம். ஒருநாள் அப்படிக் குளித்தபோது, குளத்தில் இருந்த சிறிய முதலைக் குட்டியைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டுவந்தேன்.

“தாய் முதலையிடமிருந்து குட்டியை தனியே பிரிப்பது பாவம். திரும்பவும் குளத்தில் கொண்டுபோய் விட்டு வா” என எனது தாய் சொன்னதால் மீண்டும் குளத்தில் போய் விட்டுவிட்டேன்.” எனக் கூறியுள்ளார் மோடி.

மோடியின் முதலைக் கதையைக் கேட்ட பலரும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ‘முதலை என நினைத்து ஓனானை பிடித்துக்கொண்டு போயிருப்பார்’ எனவும், ‘அன்று முதலையை வீட்டுக்கு அழைத்துச் சென்றவர், இன்று பண முதலைகளை அழைத்து வருகிறார்’ எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories