இந்தியா

“நடிகையுடன் ஒப்பிட்டு மகாத்மா காந்தியைக் கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க தலைவர்” : குவியும் கண்டனம்!

மகாத்மா காந்தியை நடிகையுடன் ஒப்பிட்டுப் பேசிய பா.ஜ.க தலைவருக்குக் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

“நடிகையுடன் ஒப்பிட்டு மகாத்மா காந்தியைக் கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க தலைவர்” : குவியும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குறைவான ஆடைகளை அணிவதன் மூலம் ஒருவர் பெரிய ஆளாக இருக்க முடியும் என்றால் மகாத்மா காந்தியை விட நடிகை ராகி சாவந்த்தாதான் பெரிய ஆளுமையாக இருந்திருக்க முடியும் என பா.ஜ.க தலைவர் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவைத் தலைவர் ஹிருதாய் நாராயண் தீக்சித் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க தலைவர் ஹிருதாய் நாராயண் தீக்சித் மகாத்மா காந்தியை நடிகையுடன் ஒப்பிட்டு கொச்சைப் படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.

அப்போது அவர், “மகாத்மா காந்தி மிகக்குறைவான ஆடைகளைத் தான் அணிந்திருப்பார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஒரே ஒரு வேட்டியை மட்டும்தான் சுற்றிக்கொண்டிருப்பார். அப்போது அவரைதான் நாடே தந்தை என அழைத்தது. தங்களுடைய ஆடைகளை களைவதன் மூலம் ஒருவர் பெரியவராக முடியும் என்றால், ராக்கி சாவந்த் மகாத்மா காந்தியை விட மிகப்பெரியவராக ஆளுமையாக இருந்திருப்பார்” என தெரிவித்துள்ளார்.

“நடிகையுடன் ஒப்பிட்டு மகாத்மா காந்தியைக் கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க தலைவர்” : குவியும் கண்டனம்!

பா.ஜ.க தலைவர் ஹிருதாய் நாராயண் தீக்சிதின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து ஹிருதாய் நாராயண் தீக்சித் “மகாத்மா காந்தி குறைவான ஆடைகளை அணிந்தார். நாடு அவரை தந்தை என அழைத்தது. குறைவான ஆடைகளை அணிவதன் மூலம் ராக்கி சாவந்த் காந்தியாக முடியாது என்று தான் தெரிவித்தேன். ஆனால் ஊடகங்கள் வேறு விதமாகத் திருத்தி வெளியிட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories