இந்தியா

சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி பணம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் - நடந்தது என்ன?

பீகார் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் 960 கோடி ரூபாய் பணம் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி பணம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பீகாரில் வங்கி தவறுதலாக டெபாசிட் செய்த ரூ.5 லட்சம் பணத்தை திருப்பி வழங்க கிராமவாசி மறுப்பு தெரிவித்து அந்தப் பணம் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த 15 லட்சத்தின் முதல் தவணை என நினைத்து செலவழித்துவிட்டதாக கூறியதால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதே பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கட்ஹார் மாவட்டம் பாஸ்டியா பகுதியைச் சேர்ந்தவர்கள் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அஷிஷ்ட் குமார். உயர்நிலை வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்கள் இருவரும் தங்கள் பள்ளியில் சீருடைக்கு அரசு அனுப்பிய பணத்தைச் சரிபார்க்க அருகில் இருந்த வங்கிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைப் பார்த்து வங்கி ஊழியர் அதிர்ச்சி அடைத்துள்ளார். அதற்குக் காரணம், அந்த மாணவர்களின் வங்கி கணக்கில் சுமார் 960 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. அதில் விஸ்வாஸ் வங்கிக் கணக்கில் 60 கோடியும், அஷிஷ்ட் குமார் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாயும் இருந்துள்ளது. இதனையடுத்து வங்கி மேலாளர் அந்த பணத்தை எடுக்கமுடியாதபடி முடக்கியுள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories