இந்தியா

“ஜெயிலுக்கு போய்ட்டு வர்றதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே” : ஆத்திரத்தில் மாமியாரை குத்திக் கொன்ற வாலிபர்!

மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்ததால் மாமியாரை மருமகன் சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஜெயிலுக்கு போய்ட்டு வர்றதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே” : ஆத்திரத்தில் மாமியாரை குத்திக் கொன்ற வாலிபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிர மாநிலம், மும்பை விலேபார்லே பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம் ஷேக். இவருக்குத் திருமணமானபோது திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்த இப்ராகிம் ஷேக் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த ஒன்றாம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்தார். பின்னர் மனைவியைப் பார்க்கும் ஆசையில் நேராக மாமியார் வீட்டிற்குச் சென்றார்.

அங்கு சென்றபோது மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் கர்ப்பமாகவும் இருந்துள்ளார். இதையடுத்து புதிய கணவனை விட்டுவிட்டு தன்னுடன் வருமாறு மனைவியை மிரட்டியுள்ளார்.

பிறகு அங்கிருந்து சென்ற அவர் அடுத்தநாள் மீண்டும் வந்து பார்த்தபோது மனைவி அங்கு இல்லை. இதுகுறித்து மாமியாரிடம் முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தில் ஷேக் தன்னிடம் இருந்த கத்தியால் மாமியாரை சரமாரியாக குத்திக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலிஸார் புனேயில் தலைமறைவாக இருந்த இப்ராகிம் ஷேகை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories