இந்தியா

"டெலிவரி சேவையை நிறுத்தும் Zomato - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி" : காரணம் என்ன?

மளிகை பொருட்கள் விற்பனை திட்டத்தை நிறுத்தப்போவதாக சோமோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

"டெலிவரி சேவையை நிறுத்தும் Zomato - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி" :  காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமாக சோமேட்டோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உணவு டெலிவரியை போன்று மளிகை பொருட்களை விற்பனை செய்வதற்காகக் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.

இதற்காக க்ரோபர்ஸ் நிறுவனத்தை முழுமையாக வாங்கத் திட்டமிட்டது சோமேட்டோ. ஆனால் சில பங்குகளை மட்டுமே வாங்க முடிந்தது. இருப்பினும் இருவரும் கூட்டுச் சேர்ந்து சோமேட்டோ ஆப் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தனர்.

மேலும் ஜூலை மாதம் முதல் இதற்கான சோதனை திட்டத்தைச் செயல்படுத்தி வந்தனர். இந்த திட்டம் செப்டம்பர் 17ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில்தான் இந்த டெலிவரி சேவையை நிறுத்தப்போவதாக சோமேட்டோ அறிவித்துள்ளது.

"டெலிவரி சேவையை நிறுத்தும் Zomato - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி" :  காரணம் என்ன?

இந்த சோதனை திட்டத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிகப்படியான பாதிப்பு ஏற்படுவதாகவும், பொருட்களின் இருப்பில் தொடர் மாற்றங்கள் ஏற்படுவதால் இந்த திட்டத்தைக் கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் திடீரென இந்த திட்டத்தை சோமேட்டோ கைவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை மளிகை பொருட்கள் விற்பனை திட்டத்திலிருந்து சோமேட்டோ நிறுவனம் பின்வாங்கியுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்விக்கி சமீபத்தில் மளிகை பொருட்கள் விற்பனையை துவங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories