இந்தியா

மூடநம்பிக்கையின் உச்சம்.. ‘கல்வீச்சு’ திருவிழாவால் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் - என்ன காரணம்?

மத்திய பிரதேசத்தில் கல்வீச்சு திருவிழாவில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மூடநம்பிக்கையின் உச்சம்.. 
 ‘கல்வீச்சு’ திருவிழாவால் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் -  என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் வினோதமான பல திருவிழாக்களை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த வரிசையில் மத்திய பிரதேசத்தில் கல்வீச்சு திருவிழாவை 300 ஆண்டுகளாக இம்மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் 'கோத்மார்' என்ற பெயரில் கல்வீச்சு திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழாவின்போது, ஜாம் நதியின் இருபுறமும் மக்கள் திரண்டு ஒருவர் மீது ஒருவர் கற்களைவீசி தாக்கிக் கொள்வதே இந்த விழாவின் முக்கிய நிகழ்வாகும்.

இதன்படி நேற்று இந்த திருவிழா நடைபெற்றது. ஜாம் நதியில் திரண்டிருந்த மக்கள் ஒருவர்மீது ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டதில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது. இதில் இரண்டுபேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விழா 300 ஆண்டுகளுக்கும் பழமையானது என்று ஊர்மக்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த விழா கொண்டாடுவதற்கான காரணம், 300 ஆண்டுகளுக்கு முன்பு ஜாம் நதியின் ஒருபுறம் அமைந்துள்ள பதூர்னா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மறுபுறம் இருக்கும் சாவர்சாவர்ஹான் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, சாவர்சாவர்ஹான் கிராம மக்கள் இவர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இவர்களைப் பாதுகாப்பதற்காக பதூர்னா கிராம மக்களும் பதிலுக்குக் கற்களை வீசியுள்ளனர். இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாகவே ஆண்டுதோறும் இந்த விழாவை இரு கிராம மக்களும் கொண்டாடி வருகிறார்கள்.

இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், “இது மூடநம்பிக்கையின் உச்சம். ஒரு காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுக் கூறுவதற்கு பல வழிமுறைகள் உள்ளது. ஆனால் இதுபோன்ற ஆபாத்தான முறைகளால் உயிருக்கு ஆபத்தான நிலையே ஏற்படும். இந்த விழாவை தடை செய்யவும், இதற்கு மாற்றாக வேறு வடிவங்களில் இந்த திருவிழாவைக் கொண்டாட வழிவகை செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories